அங்குசம் பார்வையில் ‘ மிஷன் சேப்டர் 1 ‘ படம் எப்படி இருக்கு ! .

0

அங்குசம் பார்வையில் ‘ மிஷன் சேப்டர் 1 ‘

தயாரிப்பு: ‘லைக்கா புரொடக்சன்ஸ் ‘ சுபாஸ்கரன். டைரக்டர்: விஜய். ஆர்ட்டிஸ்ட்ஸ்: அருண் விஜய், எமிஜாக்சன், நிமிஷா சஜயன், பரத் கோபன்னா, அபிஹாசன். இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: சந்தீப் கே.விஜய், சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா. பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.

படத்தின் முதல் காட்சியே காஷ்மீரில் தான் ஆரம்பிக்குது. நம்ம பார்டரைத் தாண்டி ( What a miracle) பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து விட்டது ராணுவத்திற்கு தெரிந்ததும் வீடு வீடாக புகுந்து ஆதார் அட்டை கேட்டு செக் பண்ணுகிறார்கள். ஒரு வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதலால் ராணுவ வீரர்கள் சாகிறார்கள். இந்த சீன் முடிவதற்குள்ளாகவே நமக்கு புரிஞ்சு போச்சு. ரைட்டு… ஹீரோ அருண் விஜய்க்கு இவர்கள் தான் எதிரிகள்னு. கட் பண்ணினா, தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற லண்டன் செல்கிறார் அருண் விஜய்.

அவர் லண்டன் போய் இறங்கியதுமே.. சென்னையில் இருந்து அவரின் நண்பன் போன் செய்து ” ஒமர் ஹாத்ரி அங்க தான் இருக்கான்” . ஓகே இதான் மிஷன் சேப்டர் 1 போல என நாம் நினைத்தால்… தப்பு …தப்பு …கன்னத்துல போட்டுக்கங்க என டைரக்டர் விஜய்யே நம்ம கன்னத்துல போட்டுட்டு லண்டன் ஜெயில், அங்கே இருக்கும் தீவிரவாதிகளை தப்புவிக்க வெளியில் இருக்கும் ஒமர் காத்ரி ( பரத் கோபன்னா) ப்ளான் போடுகிறார், அதுவும் ஜெயில் வாசலுக்கு முன்பு ஹைடெக் கேரவனில் உட்கார்ந்து கொண்டு. தீவிரவாதிகளின் இந்த ப்ளானுக்குப பேர் தான் மிஷன் தஸ்ரா.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

இந்த தீவிரவாதிகளுக்கும் அருண் விஜய்க்குமிடையே என்ன நடந்தது என்பதைச் சொல்ல சின்ன ஃப்ளாஷ் பேக் வைத்திருக்கிறார் டைரக்டர் விஜய். க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்னா… நாம நினைச்ச மாதிரி தான் இருக்கும். படத்தின் பிரமிப்பு அந்த ஜெயில் செட் தான். தீவிரவாதிகள் தப்பிக்க முயலும் போது, அருண் விஜய்யின் ஆக்ஷன் அவதாரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. எமோஷனல் சீன்களில் முடிந்த மட்டும் நியாயம் சேர்த்திருக்கிறார்.

Mission Chapter 1
Mission Chapter 1

லண்டன் ஜெயிலின் ஜெயிலராக எமிஜாக்சன். இவருக்கு அதிரடி ஸ்டண்ட் சீன்கள் இருந்தாலும், ஆள் பார்ப்பதற்கு வத்தி, வதங்கி, சுருங்கிப் போய் தெரிவதால், ஆக்ஷன் எடுபடவில்லை. அருண் விஜய்யின் குழந்தையை சேர்த்திருக்கும் ஆஸ்பத்திரி நர்ஸாக வருகிறார் நிமிஷா சஜயன். அவருக்கும் சீன்கள் குறைவு தான். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தான் செகண்ட் ஹீரோ. தீவிரவாதிகள் தப்ப விடாமல் அருண் விஜய் மோதும் ஸ்டண்ட் சீக்வென்ஸை சூப்பராக கம்போஸ் பண்ணியிருக்கார் சில்வா.

வேறு படங்களின் வேலைகளிலா மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் பிஸியாக இருந்த நேரத்தில் இந்தப் படத்துக்கு பாடல் கம்போசிங்கையும் பேக் ரவுண்ட் ஸ்கோரும் பண்ணிருப்பார் போல. டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் Below average படங்களில் இந்த ‘ மிஷன் சேப்டர் 1 ‘ -ம் உள்ளது.

-மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.