அங்குசம் பார்வையில் ‘நந்திவர்மன்’ படம் எப்படி இருக்கு ! ..

0

அங்குசம் பார்வையில் ‘நந்திவர்மன்’

தயாரிப்பு: ஏ.கே.பிலிம் ஃபேக்டரி அருண் குமார் தனசேகரன். டைரக்டர்: ஜி.வி.பெருமாள் வரதன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ். ஒளிப்பதிவு: சேயோன் முத்து, இசை: ஜெரார்ட் ஃபெலிக்ஸ், எடிட்டிங்: ஷான் லோகேஷ். பிஆர்ஓ: சதீஷ் (Aim). செஞ்சி அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமம். அந்த கிராமத்தில் இரவு நேரத்தில் சிலர் தலை, கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

இந்த மர்ம மரணங்களை கண்டுபிடிக்க வருகிறார் சப் இன்ஸ்பெக்டரான ஹீரோ சுரேஷ் ரவி. அதே கிராமத்தில் மன்னன் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு மண்ணுக்குள் புதைந்து போன சிவன் கோவிலைப் பற்றி ஆராய்ச்சி செய்து தோண்டியெடுக்க வருகிறது போஸ்ட் வெங்கட் தலைமையிலான தொல்பொருள் ஆராய்ச்சிக்குழு. இந்த கோவிலை தோண்டி எடுக்கச் சொன்னதே மத்திய அரசு தான் என்கிறார் டைரக்டர்.

நந்திவர்மன் திரைப்படம்
நந்திவர்மன் திரைப்படம்
- Advertisement -

- Advertisement -

4 bismi svs

அந்த ஆராய்ச்சிக் குழுவில் தான் ஹீரோயின் ஆஷா வெங்கடேஷ் இருக்கிறார். இந்தக் குழுவிற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பந்தோபஸ்துக்கு வருகிறார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி. இவர் வந்த பிறகு ஹீரோயினுடன் காதல் வராம இருக்குமா? அதுவும் வருது. அதுக்குப் பிறகு மண்ணுக்குள் இருந்து சிவன் கோயிலும் நடராஜர் சிலையும் வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த நடராஜர் திடீரென காணாமல் போகிறார்.

நடராஜரை நகர்த்தி லவட்டிய திருடர்கள் யார் என்பதை க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் வச்சு நம்மை திகைக்க வைத்து, திகிலடிக்க வைத்து அனுப்புகிறார் டைரக்டர் பெருமாள் வரதன். சிலை கடத்தும் கும்பல் பற்றித் தான் கதை சொல்ல வந்திருக்கிறார்கள். ஆனால் செஞ்சி, திண்டிவனம், வந்தவாசி, பல்லவ மன்னன் நந்திவர்மன் என முக்கால் வாசி சீன்களில் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே நமக்கு புரிந்து விடுகிறது, ரைட்டு…

இது அந்த கதைதான்னு. அனுபவ நடிகர்களான நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், கஜராஜ் போன்றவர்களைக் கூட நன்கு பயன்படுத்த திணறியிருக்கும் போது, பாவம் புதுமுகங்களை வைத்து என்ன செய்ய முடியும் டைரக்டரால்? சட்டில இருந்தா தானே அகப்பைல வரும். நந்திவர்மன் பத்தோடு பதினொன்று. அவ்வளவு தான்.

–மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.