போலி ஆவணம் தயாரித்ததாக பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு

0

போலி ஆவணம் தயாரித்ததாக
பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான ரவிக்குமார் என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

கும்பகோணம் ஷாஹாஜி தெருவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் வி.ஜி. ரவிக்குமார். வயது 48. இவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆவார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில், வழக்கறிஞர் ரவிக்குமார் தமிழகத்திற்கான மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஜனவரி 2020 முதல் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக போலி ஆவணம் தயாரிக்;கப்பட்டுள்ளதாகவும், தமது அமைச்சகத்தில் அதுபோன்ற ஆலோசனைக்குழு எதுவும் நியமிக்கப்படவில்லை என்றும், எனவே, அது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசின் தலைசை; செயலாளருக்கு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக செயலாளர் புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.

அப் புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் ரவிக்குமார் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் இந்திய தண்டனை; சட்டப் பிரிவுகள் 419 (ஆள் மாறாட்டம் செய்தல);, 466 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 468 (மோசடி செய்தல்), 474 (போலி ஆவணங்கள் வைத்திருத்தல்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் ரவிக்குமார் மறுத்தார்.

மத்திய சட்;ட மற்றும் நீதி அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக கடந்த டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தான் விண்ணப்பம் அனுப்பியிருந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக தனக்கு மேற்படி அமைச்சகத்திலிருந்து எந்தவொரு நியமன உத்தரவோ அல்லது கடிதமோ இதுவரை வரவில்லை என்றும் வழக்கறிஞர் ரவிக்குமார் கூறினார்.
எனது பெயரில் வேறு யாரோ மேற்படி ஆவணம் தயாரித்து அனுப்பி இருக்கக்கூடும். இந்நிலையில், இந்த ஆவணம் அவருக்கு எப்படி வந்தது என விசாரிக்குமாறுதான் காவல்துறையினருக்கு தலைமைச் செயலளார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், போலி ஆவணம் தயாரித்தல், ஆள் மாறாட்டம், மோசடி செய்தல், போலி ஆவணம் வைத்திருத்தல் என கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத நான்கு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எந்த அடிப்படையில் போலீஸார் இச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரியவில்லை. எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றார் வழக்கறிஞர் ரவிக்குமார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.