நடுக்குவாத நோய்க்கான அறிகுறிகள்…

0

என்னிடம் ஒரு நோயாளியை குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வந்தனர். அவர்கள் அந்த நோயாளிக்கு பல வித அறிகுறிகள் இருப்பதாக கூறினார்கள். அவைகள் என்னவென்றால், பொருட்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு, அந்த இடத்தை மறந்து தேடிக்கொண்டே இருக்கிறார்.
ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டால் அதே இடத்தில் ஐந்து மணி நேரமானாலும், அப்படியே அமர்ந்து இருக்கிறார். எல்லோரிடமும் சரளமாக பேசாமல், தனியே அமர்ந்து எதையாவது வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவை அனைத்தும் ஆறு மாதங்களாக இருப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு அடுப்பை நிறுத்தி விடுங்கள் என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே சென்று விட்டேன், வந்து பார்த்தால் குழம்பு கருகி வீடே வாடை அடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இவருக்கு மட்டும் எந்தவிதமான வாடையும் தெரியவில்லை என கூறுகிறார். இவரால் தினமும் நாங்கள் பலப்பிரச்சினைகளை சந்திக்கிறோம்.

2 dhanalakshmi joseph

இவருக்கு என்னவாயிற்று என்று எங்களுக்கு புரியவில்லை. எனவே நாங்கள் நிம்மதியை இழந்து நிற்கிறோம். இதுவே இக்குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இவையனைத்தும் நடுக்குவாத நோயின் அறிகுறிகளே. நடுக்குவாதம் வந்தால் அந்நோயாளி மட்டுமால்லாது, அவரது ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும். நடுக்குவாதம் வந்த ஒரு நபரால் தம் அன்றாட பணிகளைக் கூட சரிவர செய்ய இயலாது. இதை நோய் என்று உணராததால் பல பிரச்சினைகள் குடும்பங்களில் ஏற்படுகிறது.

எதையும் எளிதில் விழுங்க முடியாமல், மூன்று நிமிடத்தில் சாதாரணமாக சாப்பிட்டுவிடும் இட்லியைக்கூட, பதினைந்து நிமிடத்திற்கு மேலாகியும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பர். அவர்கள் வாயைத்திறந்து பேசுவதற்குக் கூட சிரமப்படுவர். அத்துடன் குளிப்பதற்கும், பல்துலக்குவதற்கும் கூட சிரமமாய் இருக்கும். உமிழ்நீரை விழுங்க முடியாமல் வாயிலேயே சேர்த்து வைத்திருப்பர். இதனால் வாயில் துர்நாற்றம் வீசும்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

பொதுவாக நாம் ஒருவரை சந்திக்க நேர்ந்தால் முதலில் புன்னகைப்போம். ஆனால் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அவ்வாறு புன்னகைக்கக் கூட முடியாது. முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், முகம் இறுகிப் போய் இருக்கும். உடல் தளர்ந்த நிலையில் இல்லாமல், தூண்போல் இறுகிப் போய் இருக்கும். உதாரணத்திற்கு எதாவது சிறிய கல் தடுக்கினாலும் கூட உடனே கீழே விழுந்து விடுவர்.

இவையனைத்தும் ஒரு நோயின் அறிகுறிகள் என்று தெரியாமலேயே பொரும்பாலும், நாட்பட விட்டு விட்டு, நோயின் வீரியத்தன்மை அதிகரித்த பிறகே மருத்துவரை நாடுகின்றனர். எனவே நேயர்களே, நடுக்குவாத நோயின் அறிகுறிகளை தெரிந்து கொண்டு, நம் குடும்பத்தாருக்கோ அல்லது உறவினருக்கோ இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மூளை நரம்பியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நான்கு முக்கியமான அறிகுறிகளைப் பற்றி முதலில் கூறுகிறேன். இவை இருந்தால் மட்டுமே நடுக்குவாத நோய் இருப்பதாக அர்த்தம். இதில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ இருந்தால் அது நடுக்குவாத நோயாக இருப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு.

1. கைகளில் நடுக்கம்.
2. உடல் தசை இறுக்கம்.
3. மிகவும் மெதுவாகத் தன் வேலைகளைச் செய்வது.
4. திடீர், திடீரென காரணமின்றி கீழே விழுவது.

இவை தவிர தலை முதல் கால் வரை
இன்னும் பல அறிகுறிகள் உள்ளன.
அவற்றைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்…

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.