இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 2

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குற்றம் நடக்கிறது என்று சொன்னால் எப்போது தான் அது நடக்கவில்லை என்பதே குற்றம்தான். இரண்டு மோசடிப் பேர்வழிகள் அடித்துக் கொள்ளும்போது வெளிவந்து விழும் ஆதாரங்களை நிராகரிக்கத் தேவையில்லை. பல புலனாய்வு இதழியல் கட்டுரைகளுக்கு ஆதாரமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் நடக்கும் ஈகோ யுத்தங்கள், கொள்கை முரண்பாடுகள், பங்குச் சண்டைகள்தாம். இதில் ஏதாவது ஒரு தரப்புதான் பல நேரங்களில் சோர்ஸாக மாறுகிறது.

அங்கிருந்து வரும் ஆதாரங்களின் தன்மை, சோர்ஸின் நம்பகத் தன்மை மற்றும் நோக்கம், இதனால் சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வு, பொதுநலன் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்துதான் ஒரு கட்டுரையை வெளியிட வேண்டுமா என்கிற முடிவு எடுக்கப்படுகிறது. இதில் முக்கியமான பங்கு வகிப்பது ஊடக நிறுவனத்தின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களும், பார்வைகளும்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

- விஜயசங்கர் ராமசந்திரன்  ஃபிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் 
 விஜயசங்கர் ராமசந்திரன் 
ஃபிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர்

ஒரு ஊடகவியலாளனுக்குத் தெரிந்த அனைத்தையும் பொதுவெளியில் கொட்டிக் கொண்டிருந்தால் உள்நாட்டுக் கலவரம் தான் நடக்கும். அதற்கான கட்டுப்பாடுகளும், சீர்தூக்கும் தன்மையும் பாரம்பரிய ஊடகங்களில் அதிகம். இப்போது வெளிவரும் ஸ்டிங் வீடியோக்களை வைத்துக் கொண்டு ஏதோ பாராம்பரிய அல்லது பொது நீரோட்ட ஊடகவியலாளர்களுக்கு பிரபல யூடியூபர்கள் மீது பொறாமை, அவர்கள் என்ன கிழித்தார்கள் என்றெல்லாம் கேட்டு பொங்கிக்கொண்டிருக்கிறார்கள் சில கிசுகிசு வீரர்கள். உண்மையில் இந்த வதந்தி கும்பலை விட பல அதிர்ச்சி தரும் உண்மைகள் முன்னவர்களுக்குத் தெரியும். ஆனால் ஆதாரம் இல்லாமல் ஒரு வரி கூட எழுத முடியாது அல்லது எழுதக் கூடாது என்பதுதான் ஊடக அறம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சுய கட்டுப்பாடு, சமூகப் பொறுப் புணர்வு, சில யூடியூப் சூரர்கள் நேர்காணல்களில் அடித்து விடும் கப்சாக்களை ‘எப்புடி தோழர் இப்புடீ’ என்று சிலாகித்துக் கேள்வியெழுப்பாமல் கடந்து செல்வதைப் போல பாரம்பரிய ஊடகவியலாளர்கள் செல்வதில்லை (அதிலும் சில கறுப்பு ஆடுகள் உண்டு). அப்படிச் சென்றாலும் அவர்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் ஆசிரியர் குழுவினால் ஆய்வு செய்யப்படும். நீங்கள் பார்க்கும் செய்தி பல சல்லடைகளைத் தாண்டிதான் வருகிறது.
இங்கு நான் முதலில் பகிர்ந்துகொள்ள விரும்பும் அனுபவம் புல்வாமா தாக்குதல் குறித்து. இன்று இந்தியாவில் அதிகபட்ச பாதுகாப்பும், கொடூரமான கட்டுப்பாடுகளும் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்கிற சந்தேகம் பெரும்பாலோருக்கு இருந்தது, இருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது குறித்து எங்கள் செய்தியாளர் எனக்கு ஒரு விவரத்தைச் சொன்னார். புல்வாமாவில் தாக்குதல் நடக்கப் போகிறது என்பது குறித்து முன்பே பல எச்சரிக்கை செய்திகள் அம்மாநில காவல்துறைக்கு உளவு அமைப்புகளினால் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றார். ஆதாரம் என்ன என்று கேட்டேன். அந்த எச்சரிக்கை தகவல்களின் காப்பி (11 எச்சரிக்கைகள்) தன்னிடம் இருப்பதாகக் கூறினார். அதை உறுதி செய்த பின் கவர் ஸ்டோரியாக எழுதச் சொன்னேன். அவர் எழுதியவுடனே அதைப் பிரசுரிக்கவில்லை. அதன் விளைவுகள் குறித்து பல முறை சகாக்களுடன் விவாதித்து, அந்தக் கட்டுரையை எப்படியெல்லாம் எழுத வேண்டும், என்னென்ன மாற்றங்கள் தேவை என நீண்ட நேரம் போனிலேயே உரையாடிய பின் தான் அது இறுதி வடிவம் பெற்றது. அது மீண்டும் பல முறை என்னால் எடிட் செய்யப்பட்டது.

கவர் ஸ்டோரியாக வெளியாகி பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கட்டுரையை ட்வீட் செய்து கேள்வியெழுப்பினர். இன்று வரை அதற்கான எந்த எதிர்வினையும் இல்லை. நாங்கள் வெளியிட்ட ஆதாரங்கள் தவறு என்று கூடச் சொல்லவில்லை. ஒரு மூத்த டெல்லி பத்திரிக்கையாளர் காஷ்மீர் மாநில காவல்துறைத் தலைவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் என்னிடம் பேச விரும்புவதாகவும் கூறினார்.

பேசச் சொல்லுங்கள் என்று என் போன் நம்பரைக் கொடுத்தேன். அவர் பேசவில்லை. பேசியிருக்கவும் முடியாது. ஏனெனில் எங்கள் ஆதாரங்கள் அனைத்தும் உண்மை. இதே நான் ஒரு யூடியூப் சூரப் புலியாக இருந்திருந்தால் பின் லேடன் கிட்ட பேசுறியா பின் லேடன்ன்ன்ன்ன்ன்னு சொல்லி உதார்விட் டுருப்பேன். நெறியாளரும் எப்புடீங்க் தோழர் இப்பூடின்னு ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்.

 

முந்தைய தொடரை வாசிக்க…

இதுதாண்டா ஜர்னலிசம் – 1

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.