குறிப்பறிந்து செயல்படுவதிலும் குறிப்பை உணர்த்துவதிலும் சிறந்தவர்

0

1980 களில் தமிழக டெல்டா பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சிநிலவியது.

அப்போது, தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். கர்நாடகத்தின் முதல்வராக குண்டுராவ் இருந்தார். மக்களின் தண்ணீர் பிரச்னையை உணர்ந்த எம்.ஜி.ஆர், அப்போதைய, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ராஜாராமை அழைத்துக் கொண்டு நேராக பெங்களூரில் உள்ள கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

2 dhanalakshmi joseph

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போனா குண்டுராவின் மனைவி, தன் கணவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வந்தவர்களுக்கு சாப்பிடுவதற்கு சமைத்து வைக்கும் படியும், தான் வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆருக்காக தடபுடலாக சமைக்கப்பட்ட உணவுகள் சாப்பாட்டு மேஜையில் வைக்கப் பட்டன. அந்த நேரத்தில் குண்டுராவும் வீட்டிற்குள் நுழைகிறார். உள்ளே வந்தவுடன் எம்.ஜி.ஆரை பார்த்து கட்டித்தழுவி வாங்க அண்ணே சாப்பிடலாம் என்று கூறுகிறார்.

- Advertisement -

- Advertisement -

எம்.ஜி.ஆரும், ராஜாராமும் சாப்பிடுவதற்கு அமர்கின்றனர். அப்போது, குண்டுராவை பார்த்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிறார் எம்.ஜி.ஆர். உடனேஅருகில்இருந்த தண்ணீரை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார்.

4 bismi svs

அப்போது, குண்டுராவை பார்த்து, எனக்கு தண்ணீர் வந்துருச்சு, என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்கிறார். உடனே பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு தொடர்பு கொண்ட கர்நாடக முதல்வர் குண்டுராவ் உடனே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுங்கள் என்றார்.

இதில், அங்கு செல்லும் வரையில் எங்கே செல்கிறோம் என்பது ராஜாராமுக்கே தெரியாது என்பதும், குண்டுராவ் மற்றும் அவரது தாய் இருவரும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக குறிப்பறிந்து செயல்படுவதிலும், பிறருக்கு குறிப்பை உணர்த்துவதிலும் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆரே. இன்றோ தமிழத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி நடைபெறுகிறது, ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களால் இவரைப் போன்று சாமார்த்தியமாக தண்ணீரை வாங்க முடிய வில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும், பாராளுமன்றத்தில் 50 எம்.பிக்களை கொண்டு மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.கவால் இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை, அதை விட கொடுமை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டி எம்.பி. ஒருவர் காட்சி ஊடகத்தில் எப்போது பேட்டியளித்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை, காவிரி மேலாண்மை என்றே தொடர்ந்து உச்சரித்து வருகிறார். வாரியத்தை விட்டுவிடுகிறார்.இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது என்கின்றனர் தமிழக மக்கள்.

முன்பாவது விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டோம். ஆனால், கோடை வெயில் தற்போதே சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி விட்டது.

இதிலிருந்து, எம்.ஜி.ஆரின் ஆட்சியின் நீட்சியா இந்த அரசு இருந்தாலும், அவருக்கு இருந்த செல்வாக்கே வேறு என்பதே நிதர்சனமான உண்மை.

-ஹரிகிருஷ்ணன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.