தமிழ் தெரியாத வேட்பாளரால் தமிழ் தேசியத்திற்கு வந்த சோதனை !

சீமானின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முழுக்க முழுக்கத் தமிழ்‌ வழியில் பயிற்றுவிக்கும் தமிழக அரசுப் பள்ளி இருக்கிறது. அங்கு அரசு சார்பில் நாமே அந்த இரண்டு குழந்தைகளையும் மேளதாளத்தோடு வரவேற்று சேர்த்துக் கொள்வோம். சவாலுக்கு சீமான் தயாரா?

0

தமிழ் தெரியாத வேட்பாளரால் தமிழ் தேசியத்திற்கு வந்த சோதனை !

தேர்தல் அலுவலர் தமிழில் படிக்க!  நாதக வேட்பாளர்  தமிழ் தெரியாமல் முழிக்க! உடன் இருந்த தம்பிகள் உற்றுப்பார்க்க ! திராவிட கட்சிகளே காரணம் என அண்ணன் கூச்சலிட! விருதுநகரில் ஒரே கூத்தா போச்சு குமாரு !

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்‌று முழங்கி வரும் சீமானுக்கு வந்த சோதனையாக, அவரது நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், தமிழ் படிக்க தெரியாமல் விழித்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை சற்றும் எதிர்பாராத நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பலரும் டாக்டர்கள். இவர்களில் ஒருவர்தான் விருதுநகர் கவுசிக். வேட்பு மனு தாக்கல் அன்று தமிழ் படிக்க தெரியாமல் தேர்தல் அலுவலரின் உதவியை விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் நாடியது விவாதங்களை ஏற்படுத்தியது.

- Advertisement -

தேர்தல் உறுதிமொழி முழுவதையும் தேர்தல் அதிகாரி ஜெயசீலன் தமிழில் படித்து காட்ட அதை  கவுசிக் திருப்பி தட்டுத்தடுமாறி தமிழில் மீண்டும் கூறினார். இவர் ஓமன் நாட்டில் படித்தவராம். அதனால், கௌசிக்கிற்கு தமிழ் பேசத் தெரியவில்லையாம். அது ஒரு பெரிய குற்றமும் இல்லை.

தமிழ் பேசத் தெரிந்த ஒருவர் தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று‌ எந்தக் கட்டாயமும் இல்லை.

ஆனால், சீமான் அடிக்குரலில் தனது வழக்கமான புளுகு மூட்டையை‌ அவிழ்த்து அதை ஆமோதிப்பது தான் வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.

திராவிடக் கட்சிகள் தங்கள் மொழியை பெருமைபடப் பேசுகின்றன. தங்கள் மொழியை நேசிக்கிற அதே நேரத்தில் பிற மொழிகளை ஒருபோதும் அவமதிப்பு செய்வதில்லை. பிற‌ மொழி பேசுகிற மனிதர்களை அடித்து துவைப்பதில்லை.

ஏன், காலம் காலமாக திராவிடக் கட்சிகள் எதிர்த்து வருகிற பிராமணர்கள் கோவில்களுக்குள் பயன்படுத்தும் சமஸ்கிருத மொழியைக் கூட மிக மென்மையாக எதிர்ப்பார்களே தவிர, வன்முறையைக் கையாள்வதில்லை.

கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அரசுகள் தீவிரமாக சமஸ்கிருத மொழியைக் கோவில்களுக்குள் இருந்து நீக்க முயற்சி செய்திருந்தால் இன்று நிலை வேறு மாதிரி‌ இருந்திருக்கும்.

பொருளாதாரக் காரணங்கள், தகுதிகள், தனது சொந்த விருப்பு வெறுப்புகள் காரணமாக சீமான் ஓமனில் கல்வி பயின்ற முதலாளி கௌசிக்கை தேர்தலில் நிறுத்தி இருக்கலாம்.

4 bismi svs

அதுவும் அவரது உரிமை. ஒரு கட்சியின் அடிப்படை உரிமை. ஆனால், தமிழ், தமிழர் என்று திரள் நிதி வழியாக தமிழர்களின்‌ உழைப்பை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழும் சீமான் அந்தத் தொகுதியில் நல்ல தமிழ் பேசும், தமிழில் பாண்டித்யம் பெற்ற‌ ஒருவரை நிறுத்தி இருக்கலாம்.

குறைந்த பட்சம் நாம் தமிழர் என்கிற கட்சிப் பெயருக்காவது ஒரு நீதி வழங்கி இருக்கலாம்.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் ஏராளமான தமிழ்க் குழந்தைகள் இருந்தாலும் சீமான்‌ ஏன் தமிழ் பேசத் தெரியாத கௌசிக் என்ற‌ குழந்தையைத் தேர்வு செய்தார்.

ஏனென்றால், அவர்தான் அதிகப்‌ பணம் கொடுத்து ஏலத்தில் விருதுநகர் தொகுதியை எடுத்தார். குட்டு வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக திராவிடக் கட்சிகள்தான் கௌசிக் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதற்குக் காரணம் என்று பிதற்றுகிறார், சீமான்.

மயில்சாமி அண்ணாதுரை‌ முதல் அப்துல் கலாம் வரை நாங்கள் தமிழ் வழியில் கல்வி பயின்று தான் இத்தகைய உயரிய நிலைகளை அடைந்தோம் என்று சொல்கிறார்கள்.‌ அதையும் சீமான் தனது ஸ்டாண்ட் அப் காமெடிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்.

கையும் களவுமாக இப்படி மாட்டிக் கொள்ளும் போது ”திராவிடம் தான் தனது மலச்சிக்கலுக்குக் காரணம் என்றும், கௌசிக்கின் கழுத்தில் கைவைத்து கருணாநிதி தமிழ் படிக்கக் கூடாது என்று ஒரு இரவில் அவரைக் கொலை செய்ய‌ முயற்சித்த போது நான்தான் குங்ஃபூ கலையைப்‌ பயன்படுத்தி காப்பாற்றினேன்” என்பார்.

அதே கூட்டத்தில் இன்னொரு புளுகு மூட்டையை உருட்டினார். தனது குழந்தைகள் இருவருக்கும் தமிழ் எழுதப்‌ படிக்கத் தெரியாது என்றும், காரணம் தமிழ் வழிப்‌ பள்ளிகள்  இல்லை என்றும் வசதியாக ஒரு பல்டி அடித்தார்.

சீமானின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முழுக்க முழுக்கத் தமிழ்‌ வழியில் பயிற்றுவிக்கும் தமிழக அரசுப் பள்ளி இருக்கிறது. அங்கு அரசு சார்பில் நாமே அந்த இரண்டு குழந்தைகளையும் மேளதாளத்தோடு வரவேற்று சேர்த்துக் கொள்வோம். சவாலுக்கு சீமான் தயாரா?

சீமானின் திராவிட எதிர்ப்பு‌ அதிலும் குறிப்பாக திமுக எதிர்ப்பு இருக்கிற வரைக்கும் தான் வசூல் களைகட்டும். உண்மைகளை அவர் ஒப்புக் கொள்ளத் துவங்கி விட்டால் வசூல் மந்தமாவது மட்டுமில்லை கட்சியே காணாமல் போய்விடும்.

சீமான் என்கிற ஒற்றை மனிதன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக தங்கள் வாழ்நாள் உழைப்பையும் கொடுத்து தங்கள் இளமைக் காலத்தையும் இழந்து எந்த அரசியல் விழிப்புணர்வும்‌ இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நமது‌ தமிழ்க் குழந்தைகளை நினைத்தால் தான் நெஞ்சம் நடுங்குகிறது.

பின்குறிப்பு : அந்த வேட்பாளரை வைத்துக் கொண்டு ஒரு உறுதிமொழி எடுக்கிறார்கள் தம்பிகள்,  “நாம் தமிலர், நாம் தமிலர்” என்று சிறப்பு ழகரத்தை கொலை செய்கிறார்கள். தற்போது வழங்கப்பட்ட மைக் சின்னத்தை கூட ஒலிவாங்கி என அழகிய தமிழில் பேசும் நீங்கள், அவர்களுக்கு குறைந்த பட்ச தமிழ் பயிற்சியாவது கொடப்பா, தமிழ் தேசிய அதிபரே.

கேஎம்ஜி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.