தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் கோரிக்கை !

1

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் கோரிக்கை !

“தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உச்ச வரம்பின்றி ஒருமாதகால ஊதியத்தை பொங்கல் மிகை ஊதியமாக வழங்கிட வேண்டும்” என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரோஸ்மில்

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசாங்கம் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசில் பணியாற்றும் “சி” மற்றும் “டி” பிரிவு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியருக்கும் மட்டும் பொங்கல் மிகை ஊதியம் ரூ 3000/-என்று அறிவித்து உள்ளது. “எ “மற்றும் “பி”பிரிவு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியருக்கு பொங்கல் மிகை ஊதியம் அறிவித்திடவில்லை. இத்தகு அறிவிப்பும், அறிவிப்பு இன்மையும் மிகுந்த அதிருப்தி அளிக்கிறது.

4 bismi svs

எனவே, தமிழ்நாடு அரசாங்கம் தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியருக்கும் ஊதிய உச்ச வரம்பின்றி ஒருமாத கால ஊதியத்தை பொங்கல் மிகை ஊதியமாக வழங்கி தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் தைப்பொங்கல் மற்றும் உழவர்திருநாளினை எதிர்கொள்வதற்கு வழிவகை செய்திட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

ஒருமாத ஊதியம் போனஸ் என்பது சாத்தியமானதா? என்ற கேள்வியோடு அங்குசம் சார்பில் ஆசிரியர் நா.சண்முகநாதன் அவர்களை அணுகினோம், ”தற்போது, சி., டி., பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஏ., பி., பிரிவு ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த காலங்களில் கடைநிலை ஊழியரிலிருந்து கலெக்டர் வரையில் பொங்கல் போனஸாக குறைந்தபட்சம் ஆயிரமாவது வழங்குவார்கள். தற்போது அதுகூட இல்லை என்ற ஏமாற்றத்திருந்துதான் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறோம்” என்கிறார், அவர்.

– அங்குசம் செய்திப் பிரிவு.

5 national kavi
1 Comment
  1. மு‌.லெட்சுமி காந்தன் says

    அருமையான பதிவு ஐயா வாடாத வாழ்த்துகள்

Leave A Reply

Your email address will not be published.