என் தம்பி பிரபாகரன் – MGR

0

என் தம்பி பிரபாகரன் – MGR

பிரபாகரன் உட்பட ஈழத்தமிழர்களுக்காக 10க்கும் மேற்பட்ட போராளி இயக்கங்கள் இருந்தாலும் 5 இயக்கங்கள் மட்டும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த 5 இயக்கங்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகள், டெலோ, இபிஆர்எல்எப், ப்ளேட், ஈரோஸ் இந்த 5 இயக்கங்களை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சந்திக்க விரும்பினார். ரகசியமாக அல்ல. பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் அழைப்பு அனைத்து தினசரிகளையும் ஆக்கிரமிப்பு செய்தது. போராளி இயக்கத் தலைவர்களுக்கோ ஆச்சரியம். முதலமைச்சர் தானாக விரும்பி அழைக்கிறார். பின்னணி என்னவாக இருக்கும். குழம்பிப்போயினர். அடுத்த அழைப்பு வந்து சேர்ந்தது. ஆனால் அழைத்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் அழைத்த தினத்திற்கு ஒருநாள் முன்னதாகவே அழைத்திருந்தார். போராளி இயக்கத்தலைவர்கள் பின்வாங்கினர். இரண்டு தலைவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு களமிறங்கினால் நம்முடைய எதிர்காலத்தை அது பாதிக்கும் என்றார் பிரபாகரன்.

இரண்டு பேருமே அரசியலில் எதிரெதிர் முகாமை சேர்ந்தவர்கள். கலைஞரை சந்தித்தால் எம்.ஜி.ஆர் கோபித்துக்கொள்வார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

எம்.ஜி.ஆரை சந்தித்தால் கலைஞர் கோபித்துக்கொள்வார். இந்த ஈகோ அரசியலில் நாம் போய் சிக்கவேண்டாம். கொஞ்சகாலம் பொறுப்போம் என்றார் பிரபாகரன். அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்திற்கும் அதுதான் சரி என்று பட்டது. அதே எண்ணத்தில் ப்ளாட் உமாமகேஸ்வரனும் அதையேதான் சிந்தித்தார். மற்றவர்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை. ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபா, டெலோவின் ஸ்ரீ சபா ரத்தினம், ஈரோஸ் பாலகுமார் ஆகியோர் மட்டும் கருணாநிதியை சந்தித்தனர்.

விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு சென்றது. உளவுத்துறை அதிகாரியான அலெக்சாண்டரை அழைத்தார். அந்த 3 பேரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.

ஆனால் பிரபாகரனை உடனடியாக வரச்சொல்லுங்கள். உடனடியாக பேசவேண்டும். சென்னை அடையாறில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் செயலகம் அங்கே சென்ற உளவுத்துறை அதிகாரி அலெக்சாண்டர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காத்துக்கொண்டிருப்பார். ஏமாற்றிவிட வேண்டாம். நீங்களும் ஏமாந்து விட வேண்டாம். நீங்கள் முதலமைச்சரையும் தமிழக அரசையும் பகைத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் செயல்படுவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டு புறப்படத்தயாரானார்

உளவுத்துறை அதிகாரி அலெக்சாண்டர் அவருடன் ஆண்டன் பாலசிங்கம், பேபி சுப்ரமணியன், சங்கர், நித்தியானந்தன் ஆகியோர் எம்.ஜி.ஆர் இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும் பிரபாகரன் வரவில்லையா என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார் எம்.ஜி.ஆர். அதற்கு சென்னைக்கு வெகுதொலைவில் அமைந்துள்ள பயிற்சி பாசறைக்கு சென்றுள்ளார் என்றனர்.

கலைஞரின் அழைப்பை நீங்கள் ஏன் ஏற்கவில்லை? நீங்கள் அழைப்பு விடுத்தபின்தான் கலைஞர் விடுத்தார். அதுவும் ஒருநாள் முன்னாலே சந்திக்க வேண்டும் என்றார்.

அதனால் தான் நாங்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டோம். எம்.ஜி.ஆர் முகத்திலே லேசான புன்னகை. போராளிகள் பிரிந்து செயல்படுவதைப்பற்றி விவரமாக கேட்டார் எம்.ஜி.ஆர். உமாமகேஸ்வரனைப்பற்றியும் விளக்கம் கேட்டார். நீண்டநாட்களாகவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அதாவது என்னுடைய அமைச்சர் ஒருவர் நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொன்னார். அது உண்மையா? நாங்கள் புரட்சியாளர்கள், சுதந்திர போராளிகள், தமிழ் ஈழத்தின் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள். எங்கள் லட்சியம் தீவிரவாதமல்ல. விடுதலை வேட்கை என்றார். எதுவும் பேசாத எம்.ஜி.ஆர் மௌனமாக அதைக்கேட்டு தலையசைத்தார்.

பிறகு பேபிசுப்ரமணியம் எழுந்து சில புகைப்படங்களை எம்.ஜி.ஆரிடம் காட்டினார். சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளின் சாட்சியங்கள். அதைப்பார்த்து அதிர்ச்சியானார் எம்.ஜி.ஆர். பேசப்பேச மேலும் பல விஷயங்களை எம்.ஜி.ஆரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

தமிழ் போராளி இயக்கங்களுக்கு மத்திய அரசு ஆயுத உதவியும், ராணுவப் பயிற்சியும் தருகிறது. ஆனால் அந்த ஆயுதங்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல. எல்லாம் பழைய ஆயுதங்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எங்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் கூட மற்ற போராளி இயக்கங்களுக்குத்தான் முன்னுரிமை. எங்களை இளக்காரமாகத்தான் நடத்துகின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக புரிந்தது. ஆனால் விடுதலை புலிகளுக்கு நிதியுதவி உட்பட எல்லாமே மறுக்கப்படுகிறது என்பது மட்டும் ஏன் என்று புரியவில்லை.

அதற்கும் ஆண்டன் பாலசிங்கம் விளக்கம் கொடுத்தார். நாங்கள் இந்திய அரசுக்கு வளைந்து கொடுக்க மாட்டோம். அவர்களது ரகசியத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம். அது தான் பிரச்னை. என்ன வேண்டும் உங்களுக்கு? எம்.ஜி.ஆர் கேட்டார்.

ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தார் பாலசிங்கம். எம்.ஜி.ஆர் முகத்தில் அதே புன்னகை. அந்த புன்னகையில் நம்பிக்கை தெரிந்தது பாலசிங்கத்திற்கு. கேட்டால் கொடுக்கக்கூடியவர் என்பதும் புரிந்தது. துணிச்சலாக கேட்டார். எங்களிடம் 200 போராளிகள் இருக்கின்றனர். மேலும் பல போராளிகளை சேர்க்கவேண்டும்.

அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். புதிய ஆயுதங்கள் வாங்கவேண்டும். இவற்றிற்கு தாங்கள் பணஉதவி செய்ய வேண்டும் என்றார். உடனே எவ்வளவு வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். பாலசிங்கத்திற்கு தொண்டை வறண்டு விட்டது.

உண்மையாகவே உதவி செய்யப்போகிறாரா? நம்ப முடியவில்லை. தடுமாற்றம். மெல்ல சுதாரித்துக்கொண்டார் பாலசிங்கம். பெரியதொகை அய்யா என்றார். அதுசரி எவ்வளவு தொகை என்றார் எம்.ஜி.ஆர்.

பாலசிங்கத்தின் தடுமாற்றத்தை புரிந்துகொண்ட சங்கர் முன்னே வந்து அய்யா 2 கோடி வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர் சாதாரணமாக நாளை தருகிறேன், நாளை இரவு 10 மணிக்கு வாகனத்துடன் வந்துவிடுங்கள் என்றார். கடவுளைப் பார்ப்பது போல் இருந்தது பாலசிங்கத்துக்கு. காற்றில் மிதப்பது போல் இருந்தது மற்றவர்களுக்கு. இந்த செய்தியை கூறி பிரபாகரனை நம்ப வைப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது அவர்களுக்கு.

மறுநாள் இரவு 10 மணிக்கு எம்.ஜி.ஆரின் பரங்கிமலை இல்லத்திற்கு வந்தார் பாலசிங்கம். எம்.ஜி.ஆர் வாசலுக்கே வந்து வரவேற்றது பரவசமாக இருந்தது பாலசிங்கத்திற்கு வீட்டிற்குள் நுழைந்த எம்.ஜி.ஆரும் பாலசிங்கமும் லிப்டில் ஏறினர். மாடிக்கு அழைத்துச்செல்கிறார் என்றால் லிப்ட் கீழ்நோக்கி சென்று நின்றது.

அது ஒரு பாதாள அறை முழுக்க முழுக்க பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக 10 அடி உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தனையும் பணம் என்று பாலசிங்கத்திற்கு புரிந்தது.

அறைக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்த 2 காலாளிகளிடம் 2 என்று விரல்களினால் சைகைகாட்டினார். அடுத்த சில நொடிகளில் லிப்டுக்குள் 8 பெட்டிகளுக்கும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டது. திரும்ப எம்.ஜி.ஆரையும் பாலசிங்கத்தையும் ஏற்றிக்கொண்டு லிப்ட் மேலே எழும்பியது.

பெட்டிகள் அனைத்தும் பாலசிங்கத்தின் வாகனத்தில் அடுக்கப்பட்டன. போலீஸ் பந்தோபஸ்துடன் பாலசிங்கத்தை அனுப்பிவிட்டு தூங்கப்போனார் எம்.ஜி.ஆர். நிமிர்ந்து உட்கார்ந்தனர் விடுதலைப்புலிகள். இலங்கை அரசால் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி கொடுமைகளை அனுபவித்து தமிழகம் கைகொடுக்கும் என்று நம்பி வந்தபோது இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டும், அவமானத்தால் தலைகுனிந்த சமயத்தில் 2 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்து அவர்களின் தலையையும், முதுகையும் நிமிர்த்திவிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அடுத்தவாரமே எம்.ஜி.ஆரை நேரில் வந்து சந்தித்தார் பிரபாகரன். தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவருடைய குடும்பம், போராட்டப்பின்னணி என எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். இனிய விருந்தோடு முடிந்தது இருவரின் முதல் சந்திப்பு. விடை கொடுத்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் சந்திக்கலாம் தம்பி என்றார் எம்.ஜி.ஆர்…

-ஹரிகிருஷ்ணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.