அரசாணை 243-ஐ திரும்பப்பெறு ! கொதிநிலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் !

1

அரசாணை 243-ஐ திரும்பப்பெறு ! போராட்டத்துக்கு ஆயத்தமான தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!

(டிட்டோ ஜேக்) பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம
(டிட்டோ ஜேக்) பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம

தொடக்கக்கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டு காலமாக இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி அமைத்து வெளியிடப்பட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை 243-க்கு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பான முடிவெடுக்கும் விதமாக, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசியர் இயக்கங்களின் கூட்டு  நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜேக்) பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் ஜனவரி-04 அன்று காலை திருச்சி அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

- Advertisement -

- Advertisement -

தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ள அரசாணை 243-ஐ உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்; கடந்த அக்டோபர்-12 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் இப்பொதுக்குழுவின் வழியே முன்வைத்திருக்கிறார்கள்.

4 bismi svs

தொடக்ககல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், முதற்கட்டமாக ஜனவரி-06  அன்று மாலை தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்துவது;

அடுத்து, ஜனவரி-11, வியாழன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது; இறுதியாக, ஜனவரி-27 சனிக்கிழமை அன்று மாவட்ட அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது – ஆகிய தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

டிட்டோ ஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான ச.மயில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலர் சுந்தரம் ரா.சண்முகநாதன்; தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர், அ.வின்சென்ட் பால்ராஜ்; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் வி.எஸ்.முத்துராமசாமி; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலர் இலா.தியோடர்; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் இரா.தாஸ்; தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் கோ.காமராஜ்; ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் டே.குன்வர் ஜோசுவா வளவன்; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலர் டி.ஆர்.ஜான் வெஸ்லி; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் நா.ரெங்கராஜன் உள்ளிட்டு டிட்டோ ஜேக் பேரமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மிக முக்கியமாக, ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி அமைக்க அரசு ஒரு குழு அமைத்திருந்தபோதும், மேற்படி குழு யாரையும், எந்த சங்கத்தையும் அழைத்துப் பேசாமல் திடீரென மாநில முன்னுரிமையினைச் செயல்படுத்தும் அரசாணை 243-ஐ வெளியிட்டிருப்பதுதான் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவிட்டதாக தெரிவிக்கிறார்கள் சங்க முன்னணியாளர்கள்.

வே.தினகரன்.

5 national kavi
1 Comment
  1. Govindasamy Mani says

    தொடக்க கல்வி விஷயத்தில் பட்டதாரி சங்க அமைப்பினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கின்றனர்.ஆரம்ப காலம் முதல் அடுத்தவரை கீழே தள்ளி தாம் மேல போவதுதான் இவர்களின் குணம்.

Leave A Reply

Your email address will not be published.