ஊரும் – உணவும் “தோட்டத்து விருந்து ஈரோடு”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஈரோட்டில் எனது க்ளையண்ட் ஒருவரை வியாபார நிமித்தமாக சந்திக்க போயிருந்தேன். வழக்கமாக அவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் மதிய உணவு அவருடன் தான். பிரமாதமான அவர் வீட்டுச் சாப்பாடே வரும். சில சமயம் புகழ் பெற்ற ஓட்டல்களுக்கும் அழைத்துச் செல்வார். இன்னிக்கு வீட்டில் சமைக்கல லஞ்ச் எந்த ஓட்டல் சார் போகலாம் சைவமா? அசைவமா? என்றார்.

உங்கள் பிரியம் சாரென்றேன் அவரும் நல்ல உணவுப் பிரியர்! ஆகவே அவரது தேர்வு சரியாகத் தான் இருக்கும் என அறிவேன்! தோட்டத்து விருந்து போகலாமா என்றார். ஈரோடு பக்கம் இது போல கிராமத்து வீட்டு ஸ்டைல் ஓட்டல்கள் மிகப்பிரபலம் என்பது தெரியும்! நசியனூர் சாலையில் இருந்து இடதுபக்கம் பிரியும் ரோட்டில் தென்னந் தோப்பு ஒன்றில் இருந்தது அந்த மெஸ் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்கள்!

இனிய ரமலான் வாழ்த்துகள்

தோப்பின் நடுவில் முனிவர்கள் ஆசிரமம் போல 3 குடில்கள் இருந்தன சாலையின் இருபுறமும் ஏராளமான கார்கள் வரிசையாக நிற்க எங்கள் காரையும் நிறுத்திவிட்டு நுழைந்தோம்! நல்ல கூட்டம் இருப்பினும் எங்களுக்கு இடம் கிடைத்தது. குடிலின் உள்ளே கடப்பா கற்களால் டேபிளும் இரும்பு சேர்களும் போடப்பட்டு இருந்தன. டேபிளில் ஒவ்வொருவர் முன்பும் கிட்டத் தட்ட ஒரு ஆட்டுக்குட்டியையே..

மூடி மறைக்கலாம் போல ‘அஜீத்’ வாழை இலைகள் விரித்து வைத்து இருந்தனர். ஒரு தட்டில் 3 எவர்சில்வர் மக்குகள் வைக்கப்பட்டன.. ஒன்றில் மீன் குழம்பு, இன்னொன்றில் மட்டன் குழம்பு மூன்றாவதில் நாட்டுக் கோழி குழம்பு இது சாப்பாடு ஆர்டர் செய்தாலே போதும் இலவசமாக இவற்றை சாப்பிடலாம்பொல பொலவென சூடான சாதம் வந்தது முதலில் நாட்டுக் கோழி குழம்பை ஊற்றி சுவைத்தேன்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பாக்கெட் மசாலா இல்லாமல் மஞ்சள்,சீரகம், மிளகாய் வத்தல், தேங்காய் ஆகியவற்றை கையால் அரைத்து வைத்த குழம்பு என்று என் நாவுப் பல்கலைக்கழகம்  சான்றிதழ் அளித்தது! மட்டன் குழம்பும் அப்படியே, மீன்குழம்பிற்கு மட்டும் வத்தல் மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து  அரைத்திருந்தார்கள் ஆஹா..! ருசி அள்ளியது. சிக்கன் கொத்துக்கறி, மட்டன் சுக்கா, ஈரல் என நாங்கள்..

மூன்று பேர் ஒவ்வொரு அயிட்டமாக ஆர்டர் சொல்லி மூன்றையும் ஷேர் செய்து கொண்டோம். எதிலுமே மசாலா கிடையாது கையால் அரைத்து சமைத்து இருந்தனர். செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் நல்லெண்ணெய் மட்டும் சரியான அளவில் பயன்படுத்தி இருந்தனர் அடுத்து ஆம்லேட் சொன்னோம் சின்ன வெங்காயத்தை சிப்ஸ் போல வட்டமாக வெட்டி பச்சை மிளகாயுடன்  பிரமாதமாக செய்திருந்தனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வறுத்த சீரகமும், மிளகும் இடித்த பொடி தூவி ஆம்லேட்டே அவ்வளவு ருசி. அடுத்து ரசம். ஆஹா! என்னா டேஸ்ட்டு கொங்கு பகுதியின் ஸ்பெஷலான பச்சைப் புளி ரசம் புளித் தண்ணியில் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி போட்டு கருவேப்பிலை சேர்த்து.சாதத்தில் சுடச்சுட ஊற்றி சாப்பிட இது தான் தேவாமிர்தம் என்பது போல இருந்தது. ஆம்லேட் காம்பினேஷனில் ரசம் சாதம் செஞ்சுரி எடுத்தது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘கடைசியாக தயிர் வாங்கிக்க மறந்துடாதிங்க இங்க அது ஸ்பெஷல்’ என்றார் க்ளையண்ட். அவர் சொன்னது போலவே கத்தி வைத்து அறுத்தது போல கெட்டித்தயிர் வந்தது. புளிக்காத, உப்பு தேவைப் படாத சுவையில் அருமையான தயிர்! எலுமிச்சை ஊறுகாயுடனும் சுக்கா வருவலுடனும் செம காம்பினேஷன்.இங்கு வறுத்த பொரித்த உணவுகளை விட குழம்பு, கூட்டு உணவுகளே பிரசித்தியானவை!

தலைக்கறி, கொங்கு கோழிக் குழம்பு, நல்லி எலும்புக் குழம்பு காரக்கறி குழம்பு போன்றவை ஸ்பெஷல். இங்கு சைவமும் உண்டு, ஆனால் Wi-Fi  இருக்கும் இடத்தில் மொபைல் டேட்டாவுக்கு என்ன வேலை! வயிற்றுக்கு பிரச்சனை தராத வஞ்சனை இல்லாது அசைவ வகைகளை ருசிக்க உகந்த இடம் ஈரோடு தோட்டத்து விருந்து!

ஏவ்வ்வ்வ்வ்வ்

 

—    வெங்கடேஷ் ஆறுமுகம் – டிஜிட்டல் கிரியேட்டர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.